Ticker

6/recent/ticker-posts

மரணத்தை கண்டு அஞ்சமாட்டேன் !- பாட்டலி சம்பிக்க ரணவக்க

நியாயத்துக்காக போராடும் போது மரணத்துக்கு அஞ்சவில்லை என்று ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் . இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள அவர், பொதுவேட்பாளர் தொடர்பில் அரசாங்கம் சேறு பூசும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

எனினும் எதிரணியின் செயற்பாடுகளில் அது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று ரணவக்க கூறினார்.
அரசாங்கம் மேற்கொண்டு வரும் சேறு பூசும் நடவடிக்கைளில் திஸ்ஸ அத்தநாயக்க, சமர்ப்பித்த ரணில் - மைத்திரிபால போலி ஆவணமும் ஒன்றாகும்.

இதேவேளை சந்திரிகாவுக்கும், சம்பந்தனுக்கும் இடையிலான உடன்பாடு மற்றும் தமக்கும் ருத்திரகுமாரனுக்கும் இடையிலான உடன்பாடு என்று பல போலி ஆவணங்களை வெளியிட அரசாங்கம் தயாராகி வருவதாக ரணவக்க குற்றம் சுமத்தினார்.
எனினும் தமது போராட்டம் தொடரும் என்று ரணவக்க தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments