Ticker

6/recent/ticker-posts

மனோ கனேசனின் கணிப்பில் மைத்திரியின் வெற்றி !

கொழும்பு, கம்பஹா, கண்டி, நுவரெலியா, பொலன்னறுவை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, கேகாலை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில், பொது எதிரணி கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்றது. ஏனைய மாவட்டங்களிலும், அரசின் ஆதரவு படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் ஏனைய எட்டு மாவட்டங்களையும் வெற்றிக்கொள்ளும் கடுமையான பல்முனை பிரச்சாரங்களில் நாம் தற்போது ஈடுபட்டுள்ளோம்.

எதிரணியின் இந்த வெற்றிப்பாதைக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு பெரும் பலம் சேர்த்து வருகிறது என தெல்தெனிய, நாவலப்பிட்டி, மாத்தளை, கம்பளை, எட்டியாந்தோட்டை, வலப்பனை, ஹங்குரான்கத, பதுரெலிய ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தொடர் பிரச்சார கூட்டங்களில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments