Ticker

6/recent/ticker-posts

ஈ.பீ.ஆர்.எல்.எப் மைத்ரீக்கு ஆதரவு

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமது நிலைப்பாட்டை ஈ.பீ.ஆர்.எல்.எப் கட்சியின் பத்மனாபா பிரிவினர் சார்பாக அதன் பொதுச் செயலாளர் சிறீதரன் வெளியிட்ட அறிக்கை 

”நடைபெறவிருக்கும் தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் தமது பெறுமதியான வாக்குகளை சரியான விதத்தில் பயன்படுத்துவர் என்று உறுதியாக நம்புகிறோம். இந்ந நாட்டில் பெடரல் முறை தீர்வொன்று  தொடர்டபாக 1995களில் சிங்கள் மக்கள் மத்தியில் பேசக் கூடியதாக இருந்தது. 

துரதிஷ்ட வசமாக இந்நாட்டின் இனப்பிரச்சினை தொர்பாக எந்தவொரு கொள்கையும் பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை.  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிபப்து, இந்து - லங்கா ஒப்பந்தத்தின் அடிப்படையில் உறுவாக்கப்பட்ட 13வது சீர்திருத்த சட்டத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது, 18வது சீர்திருத்த சட்டத்தை ஒழித்து 17வது சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தி சுயாதீன பொலிஸ் சேவையை உறுவாக்குவது மற்றும் ஊழலற்று நேர்மையான நிர்வாகத்தை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவுதல் போன்றவற்றை நாம் எதிர்பார்க்கிறோம். 

மேற்குறிப்பிடப்பட்ட காரணிகளை கருத்திற் கொண்டு தமது கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பொது ஆபேட்சகர் மைத்ரீபால சிரிசேனவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக தமது அறிக்கயைில் குறிப்பிட்டுள்ளது. 






Post a Comment

0 Comments