அரசில் அங்கம் வகிக்கும் மேலும் 17 அரசியல்வாதிகள் இன்று பொது ஆபேட்சகர் மைத்ரீபால சிறிசேனவிற்கு ஆரவளிக் முன்வந்துள்ளனர். தமன்கடுவ பிரேச சபை தலைவர் பிரேமசிரி முனசிங்ஹ, ஹிகுரன்கொட பிரதேச சபை தலைவர் சுசந்த ஞானரத்ன உள்ளடங்களாக பொலன்னறுவை மாவட்ட பிரதேச சபைகளின் ஆளுங்கட்சி அங்கத்தவர்கள் 17 பேர் புதிய ஜனாதிபதி முன்னணியின் பொது அபேட்சகர் மைத்ரீபால சிரிசேனவிற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக இன்று பொலன்னறுவையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
திபுலாகல பிரதேச சபையின் தலைவர் ஆர். புஷ்பகுமார, லங்காபுர பிரதேச சபையின் உப தலைவர் பந்துல சமன் ஆகியோரும் இதில் அடங்குவர். மற்றைய 13பேர் ஹிகுரக்கொட, லங்காபுர, தமன்கடுவ, வலிகந்த, திபுலாகல பிரேதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்கள் ஆவர்.
0 Comments