8ம் திகதி இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஆறாம் திகதி முதல் நாடுதழுவிய ரீதியில் 500 விசேட அதிரடிப்படையினர் உட்பட 71,000க்கு அதிகமான பெலிசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது பொலிஸ் திணைக்களம்.
இவ்வாறு பெருந்தொகையான பொலிசார் தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவது இதுவே முதற்தடவையெனவும் குறிப்பிட்டுள்ள பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன, வீதித் தடைகள் உட்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments