மைத்தரிபாலவின் ஆட்சியில் ஜனாதிபதியும் சட்டத்தின் கீழ் சாதாரண மனிதராகவே இருப்பார் என்று ஜாதிகஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும், தெரிவிக்கையில்,
தற்போது அரச பிரதானி, அரசாங்கத்தின் பிரதானி, நிறைவேற்று பிரதானி மற்றும் படை தளபதி என்ற சகல பதவிகளிலும் ஜனாதிபதிக்கே உண்டு. இந்த நிலைiயை மாற்றவுள்ளோம்.
மாற்றிய பின் அரச பிரதானியாக தொடர்ந்தும் ஜனாதிபதியே இருப்பார். ஆனால், ஜனாதிபதிக்கு தற்போது இருக்கும் நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்படும் என்றே இதில் புதிதாக உள்ளடங்கப்பட்டுள்ளது.
இப்பொழுது உள்ள முறையில் ஜனாதிபதி எந்த தவறைச் செய்தாலும் அவரை சட்டத்தின் முன் கொண்டு வரவோ, அவருக்கு தண்டனை வழங்கவோ முடியாது.
ஆனால், எமது அரசியலமைப்பில் சீர்திருத்தம் செய்த பிறகு ஜனாதிபதியும் சட்டத்தின் கீழ் சாதாரணமான ஒரு பொது மனிதனாகவே இருப்பர்.
அப்பிடியானால், ஜனாதிபதி எதிராக வழக்குப்பதிவு செய்யவும் முடிவும் என்றும் அவர் தெரிவித்தார்.

0 Comments