தெற்கில் இனவாதத்தைத் தூண்டி சிங்கள மக்களின் வாக்குகளை கொள்ளையிட திட்டமிட்டு வரும் மஹிந்த அரசு, ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டவகையில் தமிழ் – முஸ்லிம் முறுகலை ஏற்படுத்த முயன்று வருகிறது. இந்த வகையில் தமிழ் முஸ்லிம் உறவை சீா்குலைக்கும் முயற்சி ஒன்று அம்பலமாகியுள்ளது.
முஸ்லிம்களுக்கெதிராக தமிழ் மக்களைத் தூண்டிவிடும் ஆயிரக்கணக்கான சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட பிரசுரங்கள், கிழக்கு மாகாணத்திற்கு எடுத்துச்செல்லப்படவிருந்த நிலையில் நாரேஹன்பிட்டி பொலிஸ் கைப்பற்றியுள்ளது.
இந்த சட்டவிரோத பிரசுரங்களை அச்சிடுவதில் வங்கியொன்றின் பிரமுகர் மற்றும் அரச சார்பு தொலைக்காட்சியின் முக்கிய பிரமுகா் ஒருவரும், அவரது மனைவியும் சம்பந்தப்பட்டிருப்பதாக அறிய வருகிறது.
தமிழ் சமூகத்தையும் முஸ்லிம் சமூகத்தையும் ஒப்பிட்டு முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சியால் நமது சமூகத்தின் எதிர்காலம் மண்ணோடு மண்ணாகி விடும் என இப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆலோசகர் அருண் தம்பிமுத்துவின் கோரிக்கையாகவே இப்பிரசுரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments