எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் முன்னாள் சர்வதேச விவகாரத்துக்கான தலைவர் குமரன் பத்மநாதன் எனும் பெயரையுடைய கே.பி. என்பவர் வெளிநாடு செல்லவில்லையெனவும், இன்னும் அவர் இலங்கையிலேயே இருப்பதாகவும் சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
சர்வதேச பொலீஸான இன்டா்போலின் தேடுதல் பட்டியலில் இருக்கும் கே.பி. புலனாய்வுப் பிரிவினருடன் நாட்டை விட்டும் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது குறித்து சம்பந்தப்பட்ட ஊடகம் மேற்கொண்ட தேடலில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் தாம் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு கே.பி.யின் தனிப்பட்ட தொலைபேசி அழைப்புடன் தொடர்பு கொண்டதாகவும், அவர் தற்பொழுது (இன்று இரவு 10.00 மணி) வரையில் கிளிநொச்சியில் தங்கியுள்ளமை அறியக்கிடைத்ததாகவும் குறித்த சிங்கள ஊடகம் மேலும் கூறியுள்ளது.

0 Comments