இரத்தினபுரியில் இன்று நடைபெறும் எதிரணி பிரசார மேடையில் மைத்திரியுடன் நானும்
மேடையில் ஏறப் போவதாக பொய்யான வதந்திகளை கிளப்பி வருகின்றனர். தங்களது வங்குரோத்து
நிலையை மறைப்பதற்காக அரசிலிருந்து ஒவ்வொருவரும் இணைவதாக எதிரணியினர் பிரசாரம் செய்து
வருவதாக அமைச்சர் ஜோன் செனவிரட்ண தெரிவித்தார்.
இரத்தினபுரியில் மைத்திரியின் தேர்தல் பிரசாரத்துக்காக பெரிய மைதானம் ஒன்றை ஏற்பாடு
செய்துகொடுத்த போதும் அது வேண்டாம் என்று கூறிவிட்டு வாடகை லொறிகள் தரித்து
வைக்கப்படும் சிறிய இடத்தில் மேடையமைத்து பிரசாரம் செய்யவுள்ளனர்.
கூட்டம் குறைவாக இருப்பதால் சிறிய இடத்தில் பிரசாரத்தை நடத்தி மக்கள் தொகையை
பெரிதாகக் காட்டும் முயற்சியில் எதிரணியினர் ஈடுபட்டுள்ளனர்.
இதே போன்றே ஹொரணை பகுதியில் முன்னாள் பிரதமரும், சிரேஷ்ட அமைச்சருமான ரத்னசிறி
விக்கிரமநாயக்கா மைத்திரியுடன் மேடையேறப் போகிறார் என பிரசாரம் செய்தனர்.
களுத்துறையில் அமைச்சர் குமார வெல்கம மைத்திரியுடன் மேடையேறப் போவதாக பிரசாரம்
செய்தனர். ஏன் இவ்வாறு இவர்கள் பிரசாரம் செய்யவேண்டும். தமது அரசியல் வாங்குரோத்து
நிலையை மறைப்பதற்கு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது இந்த
போலிப்பிரசாரங்களை கிராமத்து மக்கள் நம்பத் தயார் இல்லை என்பதை இவர்கள்
மறந்துவிட்டனர்.

0 Comments