சீனாவின் அதிக சனத்தொகை கொண்ட நகரமான ஷங்காயில் புத்தாண்டுக் கொண்டாட் டங்களின் போது
ஏற்பட்டுள்ள கூட்டநெரிசலில் சிக்கி குறைந்தது 36 பேர் உயிரிழந்துள்ளனர். 47 பேர்
வரையில் காயமடைந்துள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க பண்ட் நதியோர மாவட்டத்தில்
2015ஆம் ஆண்டு புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டத்துக்காக பெருந்திரளான மக்கள்
கூடியிருந்த நிலையிலேயே இந்த சனநெரிசல் ஏற்பட்டுள்ளது. இரவுக் களியாட்ட விடுதி
யொன்றின் மாடியிலிருந்து வீசப்பட்ட பணத் தாள்களை எடுப்பதற்காக மக்கள் முண்டி
யடித்தபோதே இந்த திடீர் சனநெரிசல் ஏற்பட்டதாக நேரில் கண்டவர்களை மேற்கோள்காட்டி
சமூக இணையத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உயிர்ப்பலிகள் தொடர்பில் விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ள
சீன ஜனாதிபதி இந்த அழிவிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று
கூறியுள்ளார்.
இதனிடையே, பண்ட் பிரதேசத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால்,
புத்தாண்டு பிறப்பின்போது அங்கு பாரம்பரியமான பட்டாசு- வாணவெடிக்கைகளை இம்முறை
நடத்தக்கூடாது என்று அதிகாரிகள் தடை விதித்துள்ளதாக அரச ஊடகம் கடந்த வாரம்
தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments