Ticker

6/recent/ticker-posts

மகிந்தவின் வெற்றிக்காக பிரசாரம் செய்யும் விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள்

திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றிக்காக விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண பொறுப்பாளர்களான ராம் மற்றும் நகுலன் ஆகியோர் தற்போது கிழக்கு மாகாணத்தின் முக்கிய பிரதேசங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கான தங்குமிடம், போக்குவரத்து வசதிகளை இராணுவத்தினர் மூலம் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மேலதிகமாக இராணுவத்தினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.  தற்போதைய நிலையில் இவர்கள் தமிழ் பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதுடன், வாக்களிப்பு தினத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்ப் பிரதேசங்களில் ராம், நகுலன் மற்றும் கருணா, பிள்ளையான் குழுவினரைக் கொண்டு கள்ள வாக்களிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறத்தில் தமிழ் மக்கள் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் மகிந்த ராசபக்சவுக்கு சார்பான சில தரப்புக்கள் பிரசாரம் செய்து வருகின்றன.  2005ஆண்டு விடுதலைப்புலிகள் பெருந்தொகை பணத்தை மகிந்த ராசபக்ச தரப்பிடமிருந்து பெற்றுக்கொண்டு  தேர்தலை பகிஷ்கரித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில் விடுதலைப்புலிகளின் திருமலை அரசியல் பிரிவுத்தலைவர் எழிலனின் மனைவியும் தற்போது வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோரியுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments