Ticker

6/recent/ticker-posts

பிரபாகரனை, திரு. பிரபாகரன் என சந்திரிக்கா அழைத்தது தவறு என்கிறார் மஹிந்த ராஜபக்ஷ

மிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திரு.பிரபாகரன் என்றே அழைத்தார் எனவும், தம்மை வெறும் மஹிந்த என அழைத்தார் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இ;ன்றைய தினம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்த போதே தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றச்செயல்கள் அதிகமாக இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

தாம், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது நாட்டை ஐக்கியப்படுத்துவதே மிகவும் முக்கியமான இலக்காகக் காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தளவாடங்களுடன் ஒப்பீடு செய்த போது, படையினரிடம் ஆயுதங்களும் தளவாடங்களும் இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக படையினருக்கு தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது எனவும் அதன் ஊடாகவே புலிகள் தோற்கடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது எனவும், அந்த சுதந்திரத்திற்கு துரோகம் இழைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் கூறுவதனைப் போன்று குறைந்த செலவில் பாதைகள் அமைக்கப்பட முடியாது எனவும், எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இவ்வாறு எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Post a Comment

0 Comments