Ticker

6/recent/ticker-posts

இராணுவத்தைப் பயன்படுத்தி தேர்தல்களை குழப்பும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது – எதிர்க்கட்சி

ராணுவத்தை பயன்படுத்தி தேர்தல்களை குழப்பும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் இவ்வாறு இராணுத்தைப் பயன்படுத்தி தேர்தல்களை குழப்ப முயற்சிக்கப்படுவதாக எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதன் ஓர் கட்டமாக பொலனறுவைக்கு ஏற்கனவே ஒரு தொகுதி படையினரை அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே சில பகுதிகளில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் சிவில் உடையணித்த படையினர் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதனை தடுக்க ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments