Ticker

6/recent/ticker-posts

மைத்திரியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

ஆனமடுவ பிரதேசத்தில் நடைபெற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கூட்டம் முடிவடைந்து வீடு செல்லும்போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் காயமடைந்த ஒருவர் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனமடுவ பொலிஸார் எமது ஆதவன் செய்திச்சேவைக்கு தெரிவித்தனர்.
அத்துடன், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பான சந்தேகநபர்களை கைதுசெய்ய, நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments