முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தக்க வைத்துக்கொள்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் அஷ்ரப் துணை நின்றார். ஆனால் இன்று ரவுப் ஹகீம் அதற்கு நேர் எதிராக
செயற்படுகிறார். இதிலிருந்து தனது வழிகாட்டியிடமிருந்து எதையுமே ரவுப் ஹகீம் கற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது என தெரிவித்துள்ளார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி ஆலோசகருமான ஏ.எச்.எம் அஸ்வர்.
மீதொடமுல்ல தேர்தல் பிரச்சாரத்தின் போதே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் எதிரணியில் இருந்த போதும் கலாநிதி பதியுதீன் கச்சிதமாக செயற்பட்டு பண்டாரநாயக்க ஊடாக சமூகத்துக்கு பல நன்மையான திட்டங்களை முன்னெடுத்தார். ஜாயா சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். ராசிக் பரீத் போன்றவர்கள் சிங்கள சமூகத்தின் நல்ல உறவை வளர்க்க உதவினார்கள் ஆனால் இன்று ரவுப் ஹகீம், ரிசாத் போன்றவர்கள் புத்தி பேதலித்து நடந்து கொள்கிறார்கள்.
இவர்களுக்கு அரசாங்கத்தோடு பிரச்சினை இருந்திருந்தால் அவற்றை தேர்தலுக்கு முன்பே தீர்த்துக்கொண்டிருக்க வேண்டும் அல்லது வெளியேறியிருக்க வேண்டும். அது எப்படி இப்போது திடீர் என்று பிரச்சினைகள் உருவாகியிருன என்றும் அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments