Ticker

6/recent/ticker-posts

மஹிந்த, கோத்தபாயவைத் தாண்டி நாட்டை அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற்ற வேண்டிய காலம் இது: பைசர் முஸ்தபா

காலத்துக்கு காலம் ஒவ்வொரு நாட்டிலும் நல்ல தலைவர்கள் உருவாகுவார்கள். அந்த வகையில் யுத்தத்தை நிறைவு செய்து நாட்டில் சமாதானத்தை உருவாக்கிய ஜனாதிபதி ஒரு போற்றத்தக்க தலைவர். அதேபோன்று கோத்தபாய ராஜபக்ச சிறந்த நிர்வாகி. ஆனாலும் நாடு அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் காலமும் தேவையும் உருவாகியிருக்கிறது. அந்தப் பணியை நிறைவேற்றக்கூடிய தகுதியோடு இப்போது மைத்ரிபால உருவாகியிருக்கிறார் என தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா.

நீண்ட யோசனையின் பின் தனது பதவியைத் துறந்து நேற்று முன்தினம் எதிரணியில் இணைந்து கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா எஞ்சியிருக்கும் நாட்களில் மைத்ரி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவுள்ளதாகவும் தேர்தல் தொடர்பில் வினவப்பட்டபோது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments