ஜப்பானில் விவசாயி ஒருவரின் பண்ணையில் விளைந்த முள்ளங்கி ஒன்று 11 அடி நீளத்தில் மனிதனின் கால் விரல்களுடன் பாத வடிவில் காணப்பட்டது. இந்த அதிசய முள்ளங்கியை பலர் பார்த்து வியந்தனர். ஜப்பானில் காகாவா மாநிலத்தில் அயகவா பகுதியை சேர்ந்தவர் யூகிரோ இகுச்சி, விவசாயி. இவர், கடந்த மாதம் தனது பண்ணையில் முள்ளங்கியை பயிரிட்டார். விளைந்த முள்ளங்கிகளை நேற்று இகுச்சி அறுவடை செய்தார். பின்னர் அறுவடை செய்த முள்ளங்கிகளை இகுச்சி விற்பனை செய்வதற்காக மூட்டையில் கட்டினார்.
அப்போது ஒரு முள்ளங்கி நீளமாக காணப்பட்டது. அந்த அதிசய முள்ளங்கி, மனிதனின் கால் விரல்களை போல் மடிப்புகளுடன், 11 அடி நீளத்துடன் பாத வடிவில் அமைந்திருந்தது. அதன் எடையும் 1.5 கிலோ இருந்தது. இந்த முள்ளங்கியை விவசாய கூலி ஆட்களும் அப்பகுதி மக்களும் அதிசயமுடன் பார்த்து சென்றனர்.
அந்த முள்ளங்கியை ரெயோனனில் உள்ள பியூரி தாவர ஆராய்ச்சி பண்ணை கண்காட்சி மையத்துக்கு இகுச்சி இலவசமாக கொடுத்து விட்டார். மனிதனின் பிறப்பில் என்னென்ன அதிசயங்கள் நிகழுமோ, அதேபோல் காய்கறிகளிலும் பல்வேறு அதிசயங்களை இறைவன் நிகழ்த்துகின்றான் என்று இகுச்சி குறிப்பிட்டுள்ளாா்.

0 Comments