Ticker

6/recent/ticker-posts

மலாலா துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கு, 10 பேர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது...

2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, பாகிஸ்தான் சிறுமி மலாலா துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கில் 10 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்தவர் பள்ளி மாணவி மலாலா யூசுப்சாய் (வயது 17). கைபர் பக்துங்வா மாகாணத்தில் வசித்துவந்த இவர் தலீபான் தீவிரவாதிகளின் தடையை மீறி, பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். இதன் காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9-ந் தேதி பள்ளிக்கூட பஸ்சில் மலாலா பயணம் செய்தபோது தலீபான் தீவிரவாதிகள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் லண்டன் கொண்டு செல்லப்பட்டார்.  லண்டனில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். இந்த சம்பவத்தின்மூலம் அவர் உலகமெங்கும் பிரபலம் ஆனார். தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிற மலாலா, தலீபான்களின் தொடர் மிரட்டல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலை உள்ளது.


கடந்த 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மாணவி மலாலா யுசுப்சாய்க்கு வழங்கப்பட்டது. 

மாணவி மலாலா துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் நீதிமன்றம் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உள்ளது. ஆனால் மலாலா சுடப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளி இதில் இடம்பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகவில்லை. பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 23 வயதான அதுல்லா கான் பெயர் தண்டனை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெறவில்லை. மலாலா துப்பாக்கியால் சுடபட்டபோது போலீசாரால் அடையாளம் காணப்பட்டவா் அதுல்லா கான் ஆவான்.

Post a Comment

0 Comments