Ticker

6/recent/ticker-posts

பிணையில் வெளியே வந்த பிக்குகள்

பலாங்கொடை கூரகல புராதன பகுதிக்குள் அநாவசியமாக நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சிஹல ராவய அமைப்பின் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட ஆறு பிக்குகள் மற்றும் 17 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

பலாங்கொட நீதவான் நீதிமன்றம் இவ்வாறு பிணை வழங்கியுள்ளது. 

நீதிமன்ற உத்தரவை மதிக்காது குறித்த நபர்கள் கூகரகல புராதன பகுதிக்குள் அநாவசியமாக நுழைந்ததாக பலாங்கொட பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். 

இன்று நீதிமன்றில் ஆஜரான சந்தேகநபர்களை 2 லட்சத்து 50,000 பெறுமதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணை 29ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments