பூமி அதிா்வினால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு உதவும் பணிக்கு ஒபரேஷன் ‘மைத்ரி’ என்று இந்திய இராணுவம் பெயரிட்டுள்ளது. நேபாளத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
மேலும் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் நேபாளத்திற்கு மருந்துகள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு அனைத்து உதவியும் செய்ய இந்தியா முன் வந்துள்ளது.
அடுத்த 72 மணிநேரத்திற்கு நில அதிர்வுகள் இருக்கும் என்று அறிவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை குழு தனது மீட்பு பணிகளை செய்து வருகின்றது.

0 Comments