கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவிற்கு நியாயம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
புதிய இடதுசாரி முன்னணியின் தலைவராக விக்ரமபாகு கருணாரட்னவிற்கு நியாயம் வழங்குவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசுவேன்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன கடமையாற்றினார்.
1980களில் நாடு முழுவதிலும் கறுப்பு கொடிகள் போடப்பட்ட போது பேராதனை பல்கலைக்கழக சந்தியில் வைத்து விக்ரமபாகு கருணாரட்ன கைது செய்யப்பட்டார்.
இரண்டு கலாநிதி பட்டங்களை உடைய கருணாரட்ன, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற விரிவுரையாளர்களில் ஒருவராவார்.
எனினும் கைது செய்யப்பட்டதன் பின்னர் இன்று வரையில் அவருக்கு கடமைக்கு திரும்ப சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் எனக்கு விரிவுரையாளராக கடமையாற்றியிருந்தார்.
விக்ரமபாகு கருணாரட்னவிற்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜித சேனாரட்ன அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

0 Comments