ரஷ்யாவின் ஆளில்லா விண்கலம் ஒன்று கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பை இழந்து விண்வெளியில் சுற்றிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்துக்கான பொருட்களை ஏற்றிச் சென்ற குறித்த விண்கலம், விரைவில் பூமியில் வந்து மோதும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.எனினும் இது பூமியில் எந்த பகுதியில் விழுந்து உடையும் என்று உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.
மீண்டும் அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்கின்ற போதும், அது சாத்தியமில்லை என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் மே மாதம் 7 ம் திகதி முதல் 10ம் திகதிக்கு இடையிலான ஒரு தினத்தில் இது பூமியை வந்து மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் மே மாதம் 7 ம் திகதி முதல் 10ம் திகதிக்கு இடையிலான ஒரு தினத்தில் இது பூமியை வந்து மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments