அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அம்பாந்தோட்டையில் ஸ்ரீலசுகட்சி அங்கத்தவா்களுக்கான கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷவின் புத்திரா் நாமல் ராஜபக்ஷவின் மெய்பாதுகாவலரரான இராணுவ சிப்பாய் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் சென்றிருந்தார்.
இது தொடா்பாக நாடாளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அறியவருகிறது.
இந்தநிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் நாமல் ராஜபக்சவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள நாமல் ராஜபக்ஷ தனது மெய்ப்பாதுகாவலரிடம் தணணீா் போத்தல் மட்டுமே இருந்ததாகவும், அது துப்பாக்கி அல்லவென்றும் கூறியுள்ளதாக சிங்கள பத்திாிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 Comments