Ticker

6/recent/ticker-posts

பொது பல சேனாவுக்கு எதிரான விசாரணையை துரிதப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

பொது பல சேனாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
கொம்பனித்தெருவில் இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலொன்றுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் குர்ஆனை அவமதித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட ஐவருக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கோட்டை நீதவான் பிரியந்த லியனகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன், குறித்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments