இலங்கையில் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவையால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையில் 40 ற்கும் மேற்பட்ட நபர்கள் குற்றவாளிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதில் போரை வழி நடாத்திய இராணுவக் கட்டளைத் தளபதி, உயர் மட்ட இராணுவ தளபதிகள், மற்றும் போரை நடாத்த உத்தரவிட்ட முப்படைகளின் தளபதி, மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் உள்ளடங்கலாக இவ் அறிக்கை இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதே வேளை இவ் அறிக்கையில் விடுதலைப் புலிகள் தரப்பிலும் சிலர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் 90 வீதத்திற்கும் அதிகமாக இலங்கை அரச படைகள் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.

0 Comments