இலங்கையில் தற்போது அதிகாரப் பகிர்வு அவசியம். இலங்கையில் தமிழர்களுடன் இணைந்து நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதே ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவேண்டியகடமை என இலங்கைக்கு வருகைதந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கொ்ரி ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றங்கள் குறித்த எந்தவொரு முறையான விசாரணைக்கும் இலங்கைக்கு அமெரிக்கா உதவும். இலங்கையில் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப அமெரிக்க மக்கள் இந்த நாட்டுடன் இணைந்திருப்பார்கள். எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள், பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு, உழல்களை கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்குமாறு சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜோன் கொ்ரியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்த உடனேயே எந்த தயக்கமும் இன்றி அதனை தாம் ஏற்றுக்கொண்டதாகவும், அதற்கான சகல ஒத்துழைப்புக்களை அமெரிக்கா வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments