இந்திய துணை கண்டத்தின் அல் காயிதா தீவிரவாத இயக்கம் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை குறிப்பிட்டு வீடியோ மூலம் மிரட்டல் விடுத்து உள்ளது.
கடந்த 2ந்தேதி வெளியான அந்த வீடியோவின் தலைப்பு பிரான்ஸ் முதல் பங்களாதேஷ் வரை. இதில் துணை கண்ட அல் காயிதா பிரிவு தலைவர் என்ற மௌலானா அசிம் உமர் பேசி உள்ளார்.
இந்தியாவில் மோடியும் சங்க பரிவாரங்களும், முஸ்லிம்கள் மீது வெறுப்பை உமிழ்வதுடன் பல வழிகளில் அவர்களை கொடுமைப்படுத்துவதாகவும் கூறி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் முஸ்லிம்களுக்கு எதிரான வார்த்தைகள் போருக்கு வழிவகுக்க காரணமாக உள்ளது என மௌலானா அசிம் உமர் மிரட்டல் விடுத்து உள்ளார். இந்திய துணை கண்டத்தில் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்படும் என்றும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
உலக வங்கி சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகள், ஆள் இல்லாத விமான தாக்குதல், சார்லி ஹெப்டோ பத்திரிகை படைப்புகள், ஐ.நா.வின் கொள்கை மற்றும் நரேந்திரமோடி பேச்சுகள் என அதில் இடம் பெற்று உள்ளன. மேலும் அந்த பிரிவு வங்காள தேசத்தில் மரணமடைந்த 4 வங்காளதேச புளொக்கர் எழுத்தாளர்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்பு ஏற்று கொண்டு உள்ளது.
இந்த் வீடியோ விவரம் குறித்து இந்திய உளவுத்துறை ஆய்வு செய்து வருவதாக அறிய வருகிறது.

0 Comments