Ticker

6/recent/ticker-posts

முஹம்மது நபியவா்கள் தொடா்பான கேலிச்சித்திர ஓவிய கண்காட்சிக்கு துப்பாக்கிச் சூடு


அமொிக்காவில் முஹம்மது நபியவா்கள் தொடா்பான கேலிச்சித்திர ஓவிய கண்காட்சி ஒன்று ஊற்பாடாகியிருந்தது. பொலிஸ் பாதுகாப்போடு இடம்பெற்ற இந்த கண்காட்சிக்கு  பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த அதிகாரி மீது துப்பாக்கி நபா்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனா்.  சூடு நடத்திய இரண்டு நபர்கள் மீது பொலிஸாா் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கார்லாண்ட் நகரின் புறநகர் பகுதியில் ‘கர்திஸ் கால்வெல் சென்டர்’ என்னும் அரங்கம் உள்ளது. இங்கு நேற்று மாலை முஹம்மது நபியவா்கள் தொடா்பான  கேலிச்சித்திரம் மற்றும் ஓவிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ‘அமெரிக்காவின் சுதந்திர பாதுகாப்பு இயக்கம்’ என்னும் அமைப்பின் தலைவர் பமீலா கெல்லர் Pamela Geller இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். கண்காட்சியில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் முஹம்மது நபியவா்கள் தொடா்பான  கேலி சித்திரத்துக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் (ரூ.6 லட்சத்து 30 ஆயிரம்) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

கண்காட்சி நிறைவு பெற இருந்த நிலையில் ஓவிய கண்காட்சி நடந்த அரங்கிற்கு காரில் வேகமாகவந்த 2 பேர் அரங்கின் நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நின்றிருந்த அதிகாரியை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர்.  இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த பொலிஸார், உடனடியாக ஓவிய கண்காட்சி நடந்த அரங்கை இழுத்து மூடினர். யாரும் அரங்கை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் பார்வையாளர்கள் போலீசாரால் அறிவுறுத்தப்பட்டனர்.

துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்றும், அவர்கள் காரில் வெடிகுண்டுகளை நிரப்பி ஓவிய கண்காட்சி அரங்கின் மீது தாக்குதல் நடத்த வந்திருக்கலாம் என்றும் கருதிய பொலிஸார் மர்மநபர்கள் 2 பேர் மீது அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் காரில் இருந்த மர்மநபர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மர்மநபர்கள் சுட்டதில் காலில் காயம் அடைந்த பாதுகாப்பு அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பொலிஸார்  நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான மர்மநபர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவரவில்லை. இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் இத்தாக்குதலுக்கு ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்று உள்ளனர் என்று டெய்லி மெய்ல் செய்தி வெளியிட்டு உள்ளது. 

Post a Comment

0 Comments