யாழ், புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து வவுனியாவில் இன்று (18) ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்களால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை மாணவர்களுடன் ஆசிரியர்களும் பங்கேற்றிருந்தனர்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வித்தியாவின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமான சூத்திரதாரிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் நிறுத்தப்பட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இதேவேளை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments