வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012ம் ஆண்டு இடம் பெற்ற மோதல் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள மூவர் அடங்கிய குழுவினரால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்ஷவிடம் 06 மணித்தியாலங்கள் விசாரணைகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2012ம் ஆண்டு இடம் பெற்ற சிறைச்சாலை மோதலில் 27 கைதிகள் உயிரிழந்ததோடு 20 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது

0 Comments