Ticker

6/recent/ticker-posts

ரணில் நீதிமன்றத்தை அச்சுறுத்த முயற்சிக்கின்றாா் : சுசில் குற்றச்சாட்டு

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில்  பொதுநலவாயத்தின்  ஆலோசனையை பெறவுள்ளதாக கூறுவதன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  நாட்டின் நீதிமன்றத் துறையை அச்சுறுத்த முயற்சிக்கின்றார் என்று  சுதந்திரக் கட்சியின்  தேசிய அமைப்பாளரும் எம்.பி. யுமான சுசில் பிரேம்ஜயந்த  தெரிவித்தார். 
கெலும் மெக்ரே தயாரித்த காணொளிகளை பார்த்து  வெட்கமடைவதாக கூறியவர்கள் இன்று இராணுவ வீரர் நினைவு தின விழாவில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு கலந்துகொண்டனர் என்று தெரியவில்லை. ஆனால் தற்போதாவது இவ்வாறான கட்டத்துக்கு வந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

கொழும்பில்   நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்புக்கு ஒரு இலட்சம் மக்களை வரவழைப்பதாக பிரதமர்  தெரிவித்துள்ளார். அவரால்  5000 பேரை கொண்டுவர முடியுமா என்று கேட்கின்றோம்.   மஹிந்த ராஜபக்ஷ விஹாரைகளுக்கு செல்கின்றார். அங்கு அதிகமான மக்கள் வருகின்றனர். அவர்கள் பஸ்களில் வரவழைக்கப்படுவதில்லை.  அந்தளவுக்கு கூட பிரதமரினால் மக்களை வரவழைக்க  முடியாது. 
உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு ஒன்றை பிரதமர் விமர்சித்துள்ளார். அது மட்டுமல்ல உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில்  பொதுநலவாயத்தின்  ஆலோசனையை பெறவுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.  நீதிமன்றம் சுயாதீனமாக உள்ளதாக  ஜனாதிபதி தெரிவிக்கின்றபோது நீதிமன்றத் துறையை அச்சுறுத்தும் வகையில்  பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளார்.   இதன்மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  நாட்டின் நீதிமன்றத் துறையை அச்சுறுத்த முயற்சிக்கின்றார் என்றும் அவா் கூறினாா்.

Post a Comment

0 Comments