இவ்வருட மே தினக் கூட்டத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிகளவான மக்கள் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. பல வருடங்களுக்குப் பின்னா் ஐ.தே.க கூட்டத்திற்கு பெரும் மக்கள் தொகை திரண்டிருந்தது. பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்தக் கூட்டத்திலும் பேரணியிலும் பங்கேற்றிருந்தனர்.
ஸ்ரீலசு கட்சியின் ஆடசியை வீழ்த்திய 1977ம் ஆண்டு மே தினத்தை நினைவு கூரும் அளவில் இந்த மே தினம் இருந்ததாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனா். இதே கருத்தை பிரதமா் ரணிலும் மே தின உரையில் குறிப்பிட்டிருக்கிறாா்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இம்முறை தனியாக மே தினக் கூட்டத்தை நடத்தியது. கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற அடிப்படையில் கூட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் பங்கேற்றிருந்தார். இதேவேளை ஜே.வி.பி.யின் மே தினக் கூட்டமும் பேரணியும் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.

0 Comments