Ticker

6/recent/ticker-posts

ராஜபக்‌ஷக்கள் கொள்ளையிட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய ஜனாதிபதி படையணி!

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் சட்டவிரோதமாக சேர்த்த அரச சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு ஜனாதிபதியின் விசேட படையணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
13 பேரைக் கொண்ட இந்தப் படையணியில் இடம்பெற்றுள்ளவர்களுக்கான நியமனம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் வழங்கப்பட்டது.
கடந்த ஆட்சிக் காலத்தில் தனிநபர்கள் கொள்ளையிட்டு வைத்துள்ள அரச சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு விசேட படையணியொன்றை ஸ்தாபிக்க அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் தாக்கல் செய்த பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments