Ticker

6/recent/ticker-posts

பன்றி இறைச்சி கலக்கப்பட்ட உணவு பொருட்களுக்கு ஹலால் முத்திரை !

 பன்றி இறைச்சி மற்றும் அதன்  பாகங்கள் கலக்கப்பட்ட உணவு பொருட்களுக்கு ஹலால் முத்திரை பொறிக்கப்பட்ட சம்பவம்  ஒன்று லண்டனில் பதிவாகியுள்ளது.

ஸ்கொட்லாந்தைச் சோ்ந்த நிறுவனமொன்று இந்த பிளக் புடின் என்ற உணவு வகையை அல்டி என்ற அங்காடிக்கு  விநியோகித்திருக்கிறது. குறித்த உணவு தயாாிப்பு நிறுவனமான பன்ஜாப் பகோரா Punjab Pakora நிறுவனத்திற்கு எதிராக முஸ்லிம்கள் கிளா்ந்து எழுந்துள்ளனா்.

பன்ஜாப் பகோரா Punjab Pakora  நிறுவனம் இது அச்சுப் பிழையினால் ஏற்பட்ட தவறு என்றும் அதற்காக முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கூறியிருக்கிறது.

இந்த பிளக் புடின் என்ற உணவு வகையில் பன்றியின் இரத்தமும், பன்றியின் தோலும் கலக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பதுடன் அந்த பொதிகளில் ஹலால் என்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது.

Post a Comment

0 Comments