Ticker

6/recent/ticker-posts

அம்பலமாகும் ஷிரந்தி ராஜபக்ஷவின் மோசடி!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச அரச முத்திரையுடன் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி அந்நாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவங்சவிடம் பல வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவிற்குத் தற்போது கிடைத்துள்ள தகவல்களுக்கமைய, ஷிரந்தி ராஜபக்ஷ வின் அலுவலகத்துடன் மிக நெருக்கமாக பணியாற்றிய ஜனாதிபதி ஊடகப் பிரிவின் மிலிந்த ரத்நாயக்க என்ற நபருக்கு வீடொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஷிரந்தி ராஜபக்ஷ சிபாரிசு கடிதமொன்றை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறான சிபாரிசு கடிதத்திற்கு அரச முத்திரையுடன் கூடிய கடித தலைப்பைப் பயன்படுத்தியமை குறித்து தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவங்ச தமது உறவினர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக வீடுகளை வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதேபோல ஷிரந்தி ராஜபக்ஷவும் தனது அலுவலகப் பணியாளருக்கு அரச வளத்தை முறைகேடாக பயன்படுத்தி வீடொன்றைப் பெற்றுக்கொடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக ஷிரந்தி ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கார்லடன் ஆரம்பநிலை பாடசாலைக்கு பாரிய நிதி அறவீட்டுடன் சேர்க்கப்பட்ட குழந்தைகளை கொழும்பில் உள்ள அரசாங்கத்தின் பிரபல பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளுமாறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அத்துடன், சிரந்தி ராஜபக்சவினால் நடத்தப்பட்ட ''சிறிலிய பதவிய'' என்ற அரச சார்ப்பற்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு போலி அடையாள அட்டை இலக்கமொன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரச முத்திரையுடனான கடித தலைப்பில் அந்நாள் அமைச்சர் விமல் வீரவங்சவிற்கு ஷிரந்தி ராஜபக்ஷ அனுப்பிய கடிதத்தின் பிரதி :




















tamil.srilankamirror.com

Post a Comment

0 Comments