ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, நாளை மறுதினம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பானது சபாநாயகர் இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பு தொடர்பாக கடந்த சனிக்கிழமை, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் ஜனாதிபதி மைத்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் நாளையதினம் குமார வெல்கம, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டோர் மஹிந்தவை சந்தித்து ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு இணக்கம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரியையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவையும் சந்திக்க வைக்க, இதற்கு முன்னரும் பல ஏற்பாடுகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 Comments