அமைச்சர் ,பசில் ராஜபக்ச தொடர்பான உள்வீட்டு தகவலொன்று கசிந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து திரும்பி, வாக்குமூலமளிக்க சென்ற சமயத்தில் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவேன் என்பதை எதிர்பாராத பசில் அங்கு கத்தி கூச்சலிட்டு ரகளை செய்தாராம். அவரை பொலிசார் அமுக்கிப் பிடித்து அள்ளிச் சென்றுள்ளனர். உயர்பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஊடாக இந்த தகவல் தற்போது கசிய ஆரம்பித்துள்ளது.
திவிநெகும திட்டத்தில் பெரும்தொகை பணத்தை பசில் ஏப்பமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆட்சிமாற்றம் ஏற்பட்டதும், கட்டுநாயக்க விமானநிலையத்தினூடாக தப்பிச் சென்றிருந்தார். அவர் அமெரிக்காவில் தங்கியிருந்தபடி தற்போதைய ஆட்சியாளர்கள் மற்றும் பொலிசாரை தொடர்பு கொண்டிருக்கிறார். நாடு திரும்பினால் கைது செய்யப்படுவேனா என அவர்கள் ஊடாக நாடிபிடித்துப் பார்த்துள்ளார்.
நாடு திரும்பினால் கைது செய்யப்பட மாட்டார் என தற்போது ஆட்சியிலுள்ள சில முக்கியஸ்தர்களும், உயர்பொலிஸ் அதிகாரிகளும் பசிலிறிகு வாக்களித்துள்ளனராம். நாடு திரும்பினால் கட்டநாயக்காவில் வைத்து கைதுசெய்யவும் என்ற எந்த ஒரு உத்தரவும் தற்போது உள்ள அரசால் பிறப்பிக்கப்பட்டு இருக்கவில்லை. இதனையும் அவர் விசாரித்து தெரிந்துகொண்டுள்ளார்.
இதனால் உடனடியாக பெட்டி,படுக்கைகளை கட்டிக் கொண்டு பசில் விமானமேறிவிட்டார். திடீரென திட்டத்தை மாற்றி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டாலும் என்ற ,அச்சத்தில்த்தான் விமானநிலையத்தில் ஒருதொகை ஆட்களை கொண்டுவந்து இறக்கியுள்ளனர். விமானநிலையத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியதும், அப்பாடா என நிம்மதிப்பெருமூச்சு விட்ட பசில் இனி கைது செய்யப்பட மாட்டார்கள், மற்றதெல்லாவற்றையும் கடுவெல பொலிசிற்கு சென்று பேசிக்கதைத்து கொள்ளலாமென நினைத்திருந்தார்.
இந்தநிலையித், கடுவெல பொலிஸ்நிலையத்தில் வாக்குமூலமளித்த பின்னர்தான் கைது செய்யப்பட போகிறேன் என்பதை அறிந்துள்ளார். அதிர்ச்சியில் கத்தி, கூச்சலிட்டு ரகளை பண்ணியிருக்கிறார். பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தும் பாணியிலும் நடந்து கொண்டுள்ளார். நிதிமோசடியெனில் அதற்கு நான் பொறுப்பு சொல்ல முடியாது, அமைச்சின் செயலாளரைத்தான் நீங்கள் பிடிக்க வேண்டுமென்று அவரையும் போட்டும் கொடுத்துள்ளார். எனினும், அதனை பொலிசார் ஏற்கவில்லை. அமைச்சரின் உத்தரவுப்படிதான நாங்கள் நடந்து கொண்டோம் என ஏற்கனவே அவர்கள் கையை விரித்ததை சுட்டிக்காட்டிய போது, பசில் பதில் சொல்ல முடியாது தடுமாற்றமடைந்து அமைதியாகியுள்ளார்.
பசிலை கைது செய்வதற்காகவே உயர்மட்ட அதிகாரிகளின் ஊடாக பொய்யான வாக்குறுதியை வழங்கி ,அவரை அரசாங்கம் வலைக்குள் வீழ்த்தியதா என்ற சந்தேகமும் தற்போது கிளப்பப்பட்டு வருகிறது.

0 Comments