
யுத்தம் காரணமாக தடைப்பட்டிருந்த வட மாகாண கல்வி நிலையை மேம்படுத்தவதற்கும் மூடப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயத்தை மீள ஆரம்பிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, வடக்கு மாகாணத்தில் சீர்குலைந்துள்ள கல்வி நிலையைக் கட்டியெழுப்புவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாகக் கூறப்பிட்டார்.
அத்துடன், பிரதமரின் ஆலோசனைக்கமைய வடக்கு மாகாணத்தில் சாதாரண தர உயர் தர பெறுபேறுகளை மேம்படுத்துவது, பாடசாலையில் இடைநடுவில் விட்டுச் செல்லும் வீதத்தைக் குறைப்பது மற்றும் வடக்கில் சிறுவர்கள் முழுமையான கல்வியைத் தொடர்வது குறித்த வேலைத் திட்டத்தை தயாரரிப்பதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக வட மாகாண கல்விக் கட்டமைப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மற்றும் போதுமான ஆசிரியர்களை இணைத்துக் கொள்ளவேண்டியிருப்பதாக தெரிவித்த அமைச்சர் இராதாகிருஷ்ணன், இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு அல்லது மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வழங்குமாறு பிரதமரிடம் கேட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
www.tamil.srilankamirror.com
0 Comments