இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன நிதியத்தில் இருந்து 990,000 ரூபாவை செலவு செய்து ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு இரும்புக் கம்பங்கள் 600 கொள்வனவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்திற்கு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன நிதியை பயன்படுத்தியதால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தது.
நான்கு குற்றச்சாட்டுக்களின் கீழ் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு 24 சாட்சியாளர்கள், 15 ஆவணங்கள் கொண்டு வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க, முன்னாள் பணிப்பாளர் சந்திரபால லியனகே ஆகியோரை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய 50,000 ரூபா ரொக்க் பிணையிலும் 25 லட்சம் பெருமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவித்து உத்தரவிட்டார்.
கெஹலிய ரம்புக்வெல்ல அவுஸ்திரேலியாவில் சிகிச்சைக்கு செல்வதால் ஏனைய இருவரினது கடவுச்சீட்டை முடக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு மீண்டும் செப்டெம்பர் 2ம் திகதி விசாரணைக்கு வருகிறது.

0 Comments