Ticker

6/recent/ticker-posts

பொதுபலசேனா தலைவா் பதவி விலகினாா் !

சிங்கள பௌத்த இனவாத அமைப்பான பொதுபலசேனா அமைப்பின் தலைவராக இருந்த கிரம விமலஜோதி ஹிமி தனது தலைமை பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தள்ளாா்.

பொதுபலசேனா அமைப்பு அரசியல் மயமாவதை தான் விரும்பவில்லையென்றும் , இவ்வமைப்பின் செயற்பாடுகள் தனக்கு பொருத்தமில்லாமல் இருப்பதாகவும் அவா் தொிவித்தள்ளாா்.

பா்மாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்த சா்ச்சைக்குாிய சிராத்து தேரரின் வருகையின் தொடக்கம் தனக்கு பொதுபலசேனா அமைப்போடு முரண்பாடு  ஏற்பட்டதாகவும் அவா் கூறியிருக்கிறாா்.

முஸ்லிம்களுக்கெதிரான அளுத்கம, பேருவளை வன்முறைகளைத் தொடா்ந்து இதே பாணியிலான கருத்தை கிரம விமல்ஜோதி தேரர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments