மக்கள் பணிகளை ஊக்குவிக்கும் வகையில், எனக்கு பிறந்த தின வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
என், 92வது பிறந்த தினத்தை ஒட்டி, உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என, 47,66,837 பேர், என்னிடம் கொண்டுள்ள பாசம், அன்பின் காரணமாக குறுஞ்செய்தி வாயிலாகவும், முகநுால், 'டுவிட்டர், கூகுள் ப்ளஸ், ஹாஸ்டாக்' மற்றும் இணையதளத்தின் வாயிலாகவும், நேரிலும், கடிதம் மற்றும் தொலைபேசி மூலமாகவும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

குறிப்பாக, இந்தியாவில், 'டுவிட்டர் டிரண்டில்' முதலாம் இடத்தை பெற்று தந்தமைக்கு நன்றி.
இன்னும், ஆறேழு அகவைகள் அதிகமானால், 100 வயது வரை வாழ்ந்து, உங்களோடு நுாற்றாண்டு விழாவை கொண்டாடுவேன். அனைவரின் வாழ்த்துகள், என்னுடைய மக்கள் பணியை ஊக்குவிப்பதாகவும்; மென்மேலும் பணியாற்ற துாண்டுகோலாகவும் உள்ளது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

0 Comments