Ticker

6/recent/ticker-posts

மெகி நூடுலிஸ் நேபாளத்திலும் தடை

மெகி நூடுல்சின் விற்பனைக்கு தடை விதித்துள்ள நேபாள அரசு, அவற்றை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தடைவித்து உத்தரவிட்டுள்ளது.

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மெகி நூடுல்சில் மோனோசோடியம் குளுட்டாமேட் MSG என்ற ரசாயனப் பொருள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகம் உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இந்தியாவில் டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்டை நாடான நேபாளத்திலும் மெகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை தொடர்ந்து இந்தியாவில் இருந்து நூடுல்ஸ் இறக்குமதி செய்வதற்கும் தடைவித்து உத்தரவிட்டுள்ளதாக நேபாள விவசாயத் துறை அமைச்சக செயலாளர் உத்தம் குமார் கூறியுள்ளார். 

விரைவில் இது பற்றி விளக்க அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments