சீனாவின் யாங்ட்சே ஆற்றில் Yangtze River கப்பல் மூழ்கிய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மீட்புப்பணிகள் தாமதமாக நடைபெறுவதாக, இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரான நான்ஜிங்கில் இருந்து, தென்மேற்கு நகரமான சோங்கிங் நோக்கி 4 அடுக்குகளை கொண்ட ‘ஈஸ்டர்ன் ஸ்டார்’ என்ற பயணிகள் கப்பல் கடந்த 28ந் தேதி புறப்பட்டுச் சென்றது. அப்போது மோசமான வானிலை காரணமாக இடி மின்னலில் சிக்கிய அந்த கப்பல், எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 97 ஆக உயர்ந்துள்ளது.
உயிருடன் மீட்கப்பட்ட 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காணாமல் போன 300க்கும் மேற்பட்டவர்களை, தேடும் பணியில் 200 க்கும் மேற்பட்ட மீட்புப்பணியினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மீட்புப்பணிகள் தாமதமாக நடைபெறுவதாக இறந்தவர்களின் உறவினர்களின் குற்றம் சாட்டியுள்ளனர். இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்



0 Comments