Ticker

6/recent/ticker-posts

கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கம் ஞானசார தேரருக்கு பதில்

கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கம் ஞானசார தேரருக்கு பதில்
கடந்த 27ஃ05ஃ2015 அன்று கிருலப்பனை பௌத்த மத்திய நிலையத்தில் நடந்த பொதுபலசேனவின் ஊடகவியளாலர் சந்திப்பின் போது பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயளாலர்  ஞானசார தேரர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் இலங்கையில் அமுலில் உள்ள முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை இல்லாதொழித்து இலங்கையில் முஸ்லிம்களின் சகல விடயங்களும், இலங்கையில் அமுலில் உள்ள பொது சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதும் இலங்கை சட்டமுறை ((Legal System of Sri Lanka) ) பற்றிய அறியாமையை அளந்து காட்டும் அளவீடாகவே காண்கின்றோம் என கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கம் தமது அறிக்கையில் கூறியுள்ளது.


சங்கத்தின் கௌரவ தலைவர் சட்டத்தரணி ஜனாப் நியாஸ் முஹம்மதும், கௌரவ செயளாலர் ஏ.ஆர்.எம். முஸம்மில் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் தமது அறிக்கையில், ஷபல்லின சமூகங்கள் ஒன்றினைந்து வாழும் நம் நாட்டில்   தொன்றுதொட்டு இன்று வரை இனங்களுக்கு இடையில் சக ஜீவனத்தை உண்டு பண்ணும் நோக்கில் இனங்களின் தனித்துவத்தை காத்துக் கொள்வதற்காக வடபகுதி மக்களுக்கு தேசவழமை சட்டத்தையும் கண்டியில் வாழும் சிங்களவர்களுக்கு கண்டிச் சட்டத்தையும் இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் தனியார் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு உரிமை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த உன்னத நோக்கங்களை புரிந்து கொள்ளாத ஞானசார தேரர் போன்றவர்கள் உரையாற்றுவது அவரின் அறியாமையையும், பேரினவாதிகளின் மத்தயில் தவறான கருத்துக்களை புகுத்தி அவர்களை           வழிகெடுக்கும் நோக்கில் இலங்கையில் முஸ்லிம்களுக்கென்றொரு தனியார் சட்டத்தை அமுல்படுத்த கூடாது எனவும் அதன் விளைவாக இலங்கை சவுதி அரேபியாவின் ஒரு பிராந்தியமாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அர்த்தமற்ற, அறிவில்லாத பொய் பிரசாரங்களை மேற்கொண்டு சிங்கள மக்கள் மத்தியில் தவறான சிந்தனைகளை புகுத்தி மீண்டும் பிரச்சினையை உருவாக்க முற்படுவது          வேதனைக்குரிய விடயமாகும்.

மேலும் அக்கூட்டறிக்கையில், தேசவழமை சட்டத்தை தமிழ் மக்கள் பின்பற்றுவதால் தனியான          தனிதேசமோ கண்டிச் சட்டத்தை கண்டிச் சிங்களவர்கள் பின்பற்றுவதால் வேறான கண்டி ராச்சியமோ, முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை முஸ்லிம் பின்பற்றுவதால் தனியான இஸ்லாமிய தேசமோ      இலங்கையில் உருவாகப் போவதில்லை. மாறாக இனங்களின் தனியார் சட்டங்களை இனவாத சிந்தனை   கண்ணோட்டத்துடன் நோக்குவதும், நினைப்பதும் வீணான இனப்பிரச்சினைகளுக்கு வழிகோரும் காரணங்களாக அமைவதோடு மீண்டும் வீணான இனப்பிரச்சினைகளை மீண்டும் நாட்டில் உருவாக்கி மூன்று தசாப்தங்களாக புரியோடிப்போயிருந்த யுத்தத்துக்கு முடிவு கண்டு நிம்மதியான சுதந்திர மூச்சு விடும் இக்காலக்கட்டத்தில் மீண்டும் இருண்ட காலத்தை தோற்றுவிக்க முற்படுவது கண்டனத்துக்குரிய விடயமாகும் மேலும் இவ்வாறான அர்த்தமற்ற அறிக்கைகளை மக்கள் மனதில் குறிப்பாக பேரினவாத தீவிரவாதிகளின் மத்தியில் புகுத்தி நாட்டை சீரளிக்க  வீணான கற்பனைகளை வெளியிடுவதை சித்த சுவாதீனமுள்ள நியாயமான முறையில் சிந்திக்கும் எந்த மனிதனும் அனுமதிக்க மாட்டான்.

இவ்வாறான ஒரு விடயம் பொதுபல சேனாவுக்கு மாத்திரம் புரியாமல் இருப்பது அவர்களின் அறிவீனத்தையே  வெளிப்படுத்துகிறது. எனவே பொதுபல சேனாவின் செயளாலர் கலகொட அத்தே ஞானசார தேரர் போன்ற மதகுருமார் இலங்கை சட்டமுறை தொடர்பான தமது அஞஞ்னத்தை போக்கிக் கொள்வது காலத்தின் தேவையாகவே நாம் கருதுகின்றோம். இதேபோன்றும் இவர்களுக்கு சார்பாக சில அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இலங்கையின் ஒற்றுமையை சீர்குழைக்க கூடிய கருத்துக்களையும், பிரிவினை வாதம், யுத்த சூழ்நிலைகளையும் சுட்டி காட்டி கருத்துக்களை வெளியிடுவதாலும் பேரினவாதிகளின் மத்தியில் பல வித குழப்ப நிலையை உருவாக்கவே இவர்கள் யாவரும் முற்படுவதும் புலனாகின்றது. எனவே இவ்வாரான கருத்துக்களை  தவிர்த்து கொள்வது நாட்டு நலனில் சிரத்தை கொள்ளும் யாவருக்கும் பயனளிக்கும் என்றும்        அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments