புற்று நோயால் பாதித்த ஒருவருக்கு மண்டையோடு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் ஒஸ்டின் நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் பாய்ஸன். 55 வயதான ஜேம்ஸ் ‘லீயோமியோசர்கோமா’ என்னும் அரிய வகை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் மண்டையோடு மற்றும் உச்சந்தலை முழுவதும் புற்று நோய் பரவியது. மருத்துவர்கள் இவருக்கு கதிரியக்க சிகிச்சை அளித்தனர். சிகிச்சையின் போது ஜேம்ஸின் மண்டையோடு பெரிதும் பாதிப்புக்குள்ளானது. எனவே அவருக்கு ஹூஸ்டன் ஆன்டர்சன் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஹூஸ்டன் மெத்தடிஸ்ட் மருத்துவமனை மருத்துவர்கள் மண்டையோடு மற்றும் உச்சந்தலை மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்தனர்.
கடந்த 22-ந் தேதி மண்டையோடு மற்றும் உச்சந்தலை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. அத்துடன் சர்க்கரை நோய் காரணமாக பாதித்த சிறுநீரகம் மற்றும் கணைய மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இறந்தவரின் தானமாக பெற்ற மண்டையோட்டை நுண்ணிய அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி, திசுக்களையெல்லாம் மாற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஜேம்ஸின் தன்னம்பிக்கை பொறுமை, தைரியம் இவை தான் இந்த மண்டையோடு மற்றும் உச்சந்தலை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிப்பெற முதல் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிகிச்சைக்கு பின் அரோக்கியமாக இருக்கும் ஜேம்ஸின் புகைப்படத்தையும் மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments