நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் பற்றிய அண்மைத் தகவல்கள் அடங்கிய கோப்பு ஒன்றை இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் தயார் செய்துள்ளது. இதனை பாகிஸ்தானிடம் வழங்கி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி, பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவூத் இப்ராஹிம், ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சகியூர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட தீவிரவாதிகளின் நடமாட்டம் பற்றி உள்துறை அமைச்சகம் புதிய கோப்பினை தயாரித்துள்ளது.
குறிப்பாக, தீவிரவாதிகளின் நடமாட்டம் பற்றியும், அவர்கள் தங்கியிருக்கும் இடங்களின் முகவரி பற்றியும் இந்தக் கோப்பில் தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கோப்பினை வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. இதனை பாகிஸ்தான் அரசிடம் அளித்து, நடவடிக்கை எடுக்கவும் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments