ஈராக்கின் அன்பர் மாகாணத்தில் வடக்கு ரமதி நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈராக்கின் மூத்த ராணுவ அதிகாரி 2 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு பாக்தாத் ரமதி நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடித்த நகரை மீட்க ஈராக் ராணுவம் மற்றும் பெhலீசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் ரமதி நகரில் ஜெரய்ஷி பகுதியில் நடைபெற்ற கார் வெடி குண்டு தாக்குதலில் அன்பர் ஆபரேஷன் கமாண்டர் மேஜர் ஜெனரல், அப்தெல் ரஹ்மான் அபு ரஹ்பீ மற்றும் 10 வது டிவிஷன் தலைவர் பிரிகேடியர் சபீன் அப்தெல் மஜீத் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 3 பொது மக்களும் பலியானார்கள் என ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ரஹ்யா ரசூல் தெரிவித்துள்ளார்.
0 Comments