சூடான் நாட்டில் பெட்ரோல் டேங்கர் லொரி வெடித்து சிதறியதில் 176 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சூடான் நாட்டின் தலைநகரான ஜூபாவிற்கு மேற்கே ஈகுடோரியா என்ற பகுதியில் பெட்ரோல் ஏற்றி சென்ற ஒரு டேங்கர் லொரி திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
அப்போது, அந்த லொரியில் இருந்து வெளியேறிய பெட்ரோலை பிடிக்க அந்த பகுதி மக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென லொரி தீப்பிடித்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில், பெட்ரோல் பிடிக்க அங்கு திரண்டிருந்த 176 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
மேலும், இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலை மிகவும் மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

0 Comments