ஐநா அமைப்பின் அங்கமாகிய கல்வி அறிவியல் கலாச்சார நிறுவனம் (யுனெஸ்கோ) எழுத்தறிவின்மையை அகற்றும் நோக்கோடு 1965 செப்டம்பர் 8ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் மாநாட்டை நடத்தியது.
இதில் உலக நாடுகளைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில்தான் உலக எழுத்தறிவின்மையை அகற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டன.இதன் பரிந்துரைகளின்படி யுனெஸ்கோவின் 14வது பொதுக்குழு கூட்டம் 1965 நவ. 17ல் நடந்தது. இதில்தான் உலக எழுத்தறிவு தினம் பிரகடனம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1966 முதல் செப். 8 உலக எழுத்தறிவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்திற்கும் உணர வைப்பதே இதன் நோக்கம்.உலகில் சுமார் 781 மில்லியன் பேர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மூன்றில் 2 பேர் பெண்கள். 2006ல் யுனெஸ்கோவின் அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதன்படி தெற்கு மேற்கு ஆசியா பகுதிகளில் மிகக்குறைந்த சதவீதம் பேர் (68.6) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்து ஆப்பிரிக்காவும் (62 சதவீதம்) உள்ளது. தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர் புர்கினோபாசோ (12.8 சதவீதம்) நைஜர் (14.4) மாலி (19) ஆக உள்ளது. எழுத்தறிவின்மை என்பது வாசிக்க, எழுதத் தெரியாமை என்பதையும் கடந்து, பல்வேறு முன்னேற்றமின்மைக்கு காரணமாக விளங்கி விடுகிறது.
நம் நாட்டைப் பொறுத்தளவில் வேலை, பொருளாதாரம் போன்றவற்றுக்கு கல்வியே பிரதானம். கடந்த தலைமுறையில் இருந்து கல்வியால் முன்னேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கு முன்பு வரை பரம்பரைச் சொத்து இதனை தீர்மானித்து வந்தது.
உலகின் பலதரப்பட்ட விபரங்கள் எழுத்துக்களாக விரவிக்கிடக்கும் வேளையில் எழுத்தறிவின்மையால் அவற்றை உணர்ந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. நாட்டு நடப்புகள், தனக்கு, தன் குடும்பத்திற்கான விபரங்கள் போன்றவற்றிற்கு பிறரை நம்பியே காலம் தள்ள வேண்டியுள்ளது. எழுத்தறிவு பிரச்னை கல்வியால் தீர்க்கப்பட வேண்டிய சமூக பிரச்னை என்று கருதப்படுகிறது.

0 Comments