அரபு வசந்தம் எனும் போர்வையில் ரியூனிசியாவில் ஆரம்பித்து இன்று சிரியா வரை வந்தடைந்துள்ள மத்திய கிழக்கை அக்கிரமிக்கும் ஏகாதிபத்திய சக்திகளின் நிகழ்ச்சி நிரல் மத்திய கிழக்கை மயான
பூமியாக மாற்றியுள்ளது என நேற்று (7) ஐநா காரியாலயத்திற்கு Human Care அமைப்பு கையளித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியாவில் தோன்றியுள்ள மனித அவலங்களை முடிவுக்கு கொண்டுவர ஐநா முயற்சி எடுக்க வில்லை யென்று கூறியுள்ள அந்த அமைப்பு, இது தொடர்பாக மகஜர் ஒன்றையும் ஐநா காரியாலய அதிகாரியிடம் சமர்ப்பித்தது. அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் மிப்லால் மற்றும் அதன் செயலாளர் கலீலுல் றஹ்மான் ஆகியோரின் கையொப்பத்துடன் கையளிக்கப்பட்ட மகஜரில்,
மத்திய கிழக்கின் வளங்களை சுரண்டும், ஏகாதிபத்தியத்தின் மனித நேயமற்ற இந்த நிகழ்ச்சி நிரலுக்கு தாங்களது ஐக்கிய நாடுகள் சபை செயலற்று கிடப்பதையும், அமெரிக்கா போன்ற நாடுகளின் அடாவடித்தனங்களுக்கு தாங்களது சபை முழுமையாக அடிபணிந்து கிடப்பதையும் இந்நாட்டின் ஏற்பட்டுள்ள மனித அவலங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபை ஏகாதிபத்திய சக்திகளின் கைக்கூலியாக செயற்படும் இந்நிலையை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், ஏகாதிபத்திய சுரண்டல் அரசியலுக்கு களமாகும் மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள் மீது தொடுக்கப்படும் மனித உரிமை மீறல்களை தாங்களது சபை மௌனமாக
பார்த்துக் கொண்டிருப்பதையும் நாம் வன்மையாக கண்டிக்கிறோhம்.
இன்று மத்திய கிழக்கு மக்களின் அநாதவரற்ற அகதி வாழ்வு நிலை ஒரு சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில் தொடர்ந்தும் ஒரு பார்வையாளராக ஐக்கிய நாடுகள் சபை இருக்கக் கூடாது என்பதே எங்களது வேண்டுகோளாகும்.
ஆக்கிரமிப்பு மற்றும் சுரண்டல் கொள்கையை மையப்படுத்தி உருவாகி வரும் பூகோள அரசியல் நிலையை பல நாடுகளின் மீது யுத்தத்தைத் திணித்துள்ளது. ஏகாதிபத்திய சக்திகளும், ஒவ்வொரு நாட்டின் சர்வாதிகாரிகளுக்கும் இடையிலான இந்த போரில் அப்பாவி மக்களே தமது உயிர் உடமைகளை
இழந்து வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஏகாதிபத்திய நாடுகள் தமது எதிரி நாடுகளை பழிவாங்குவதற்காக அந்தந்த நாடுகளில் தீவிரவாதிகளை பயங்கரவாதிகளாக மாற்றி, அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன. உலகை மயான பூமியாக மாற்றி வரும் ஏகாதிபத்திய சக்திகளின் இந்த அரசியலை
உங்களால் இன்னும் தடுக்க முடியாமல் இருப்பது வேதனையளிக்கக் கூடிய ஒரு விடயமாகவே நாங்கள் கருதுகிறோம்.
வலிமையான நாடுகளின் மனித உரிமை மீறல்களை, குறைகளை கண்டும் காணாமல் இருக்கும் உங்கள் சபை, வலிமை குன்றிய நாடுகளின் குறைகளை தேடுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பதை எங்களால்
அவதானிக்க முடிகிறது.
மத்திய கிழக்கை யுத்தக் காடாக மாற்றி இலாபம் தேடும் பூகோள அரசியலால் இன்று அல்லல்படும் மக்களின் துயர்களை துடைப்பதற்கும், மக்களின் இறையாண்மையை பாதுகாத்து சுதந்திரமான சூழ்நிலையில் அந்தந்த
நாட்டு மக்கள் வாழ்வதற்குரிய சூழலை உருவாக்குவது உங்கள் சபையின் தலையாய கடமை என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றோம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளது.

0 Comments